• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் உயிரிப்பல்லுயிர் சட்டத்தை கையாளவது, அணுகுதல் குறித்த பயிற்சி முகாம்

February 21, 2019 தண்டோரா குழு

உயிரிப் பல்லுயிர் சட்டத்தை கையாளவது மற்றும், அணுகுதல் அதன் வழிமுறைகளை செயல்படுத்துவதற்கான பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது.

தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியத்தின் சார்பில், மாவட்ட அளவிலான வன அலுவலர்கள் கலந்துகொண்ட பயிற்சி முகாம் கோவை தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறையில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய 17 மேலாண்மை குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு உயிரி பல்வகைமை வாரியத்தின் செயலாளர் மற்றும் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன்,

ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் உயிரி பல்வகைமை பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டு வருகிறது. உயிரி பல்வகைமை சட்ட விதிகளின் முக்கிய நோக்கங்கள் இக்கூட்டத்தில் விவரிக்கப்பட்டு உள்ளது. பல்லுயிர் மேலாண்மைக் குழுக்களை மேம்படுத்துவதில் அரசின் சார்பு துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்குகள் குறித்து விளக்கப்பட்டதாக கூறினார்.

மேலும், இந்த பயிற்சி பட்டறை சென்னையில் உள்ள தேசிய உயிரி பல்வகைமை ஆணையம் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த ஜி.ஐ.இசட்.
என்ற நிறுவனத்துடன் இணைந்து நடைபெற்றது.

மேலும் படிக்க