• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நான்கு இடங்களில் எழுத்துத்தேர்வு

June 25, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு நான்கு இடங்களில் எழுத்துத்தேர்வு நடைபெற்று வருகின்றது.

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள 444 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.சூலூர் ஆர்.வி்எஸ் கல்லூரி,கோவில்பாளையம் எஸ்.என்.எஎஸ் கல்லூரி, மலுமிச்சம்பட்டி ஹிந்துஸ்தான் கல்லூரி மற்றும் கவுண்டம்பாளையம் கொங்குநாடு கல்லூரி ஆகிய நான்கு இடங்களில் இந்த தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் ஆயிரக்கணக்கானோர் தேர்வு எழுதி வருகின்றனர்.காலை ஆங்கில தேர்வும், மதியம் தமிழ் எழுத்து தேர்வும் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர்கள் அழைப்பு கடிதம், அடையாள அட்டை மற்றும் பேனா போன்றவற்றை மட்டுமே கொண்டு வரவேண்டும் எனவும் அவற்றை தவிர மற்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கவுண்டம்பாளையம் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் தேர்வில் 1300 பேர் கலந்துகொண்டுள்ளனர்.மேலும் தேர்வு நடைபெறும் கல்லூரி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மேலும் படிக்க