• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளைஞரை கத்தியால் குத்திவிட்டு 30 லட்சம் ரூபாய் பணம் பறிப்பு

October 15, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டம் கணியூர் சுங்கச்சாவடி அருகே, இளைஞரை கத்தியால் குத்திவிட்டு 30 லட்சம் ரூபாய் பணம் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்த்தமிழரசன், சிவராஜ் ஆகியோர் இன்று இரவு புல்லட் இரு சக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

இவர்களது வாகனத்திற்கு முன்பு FZ இருசக்கர வாகனத்தில், கோவையை சேர்ந்த தர்ஷன், ராகுல் குமார் ஆகியோர் சென்று கொண்டிருந்தனர்.

கணியூர் சுங்கச்சாவடி அடுத்துள்ள மேம்பாலம் அருகே இரு சக்கர வாகனங்கள் வந்து கொண்டிருந்த போது, தமிழரசன், சிவராஜ் வந்த இருசக்கர வாகனம் தர்ஷன், ராஜ்குமார் சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.

அப்போது அங்கு அவர்களை பின்தொடர்ந்து 4 இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ராகுல்குமாரின் முதுகில் கத்தியால் குத்திவிட்டு அவரிடம் இருந்த 30 லட்சம் ரூபாயை பறித்துச் சென்றனர்.

இந்நிலையில் கத்திகுத்து காயமடைந்த ராகுல்குமார் மற்றும் விபத்தில் படுகாயமடைந்த தர்ஷன்,தமிழரசன், சிவராஜன் ஆகியோரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ராகுல் குமார் கோவை அரசு மருத்துவமனையிலும், மற்ற 3 பேரும் ஒண்டிப்புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கருமத்தம்பட்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ராகுல் குமார் கொண்டு வந்த பணம் யாருடையது என்பது குறித்தும் கொள்ளையடித்து சென்றவர்கள் யார் என்பது குறித்தும் கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க