• Download mobile app
18 Apr 2024, ThursdayEdition - 2990
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் – சென்னையை சேர்ந்த நபர் கைது

November 18, 2019 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரில் வாலிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் சென்னையை சேர்ந்த முன்னா என்பவரை குனியமுத்தூர் தனிப்படை போலீஸார் கூடலூரில் வைத்து கைது செய்தனர்.

கோவை குனியமுத்தூர் முத்துசாமி வீதியை சேர்ந்தவர் மணிகண்டன். கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய இரு சக்கர வாகனம் மற்றும் கார்களை அடமானம் வைப்பவர்களிடம் காரை பெற்று பணம் வாங்கி கொடுக்கும் வேலையை செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மதுக்கரையை சேர்ந்த சலீம் என்பவர் கொடுத்த காரை, கரும்புக்கடையை சேர்ந்த சதாம் உசேன் என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.4 லட்சம் பணம் பெற்றதாக தெரிகிறது. இந்த நிலையில் மணிகண்டன் அடமானத்திற்கு வைத்த கார் மாயமானதாகவும், காருக்கான பணம் ரூ.5 லட்சத்தை கேட்டு மணிகண்டன், சலீல் இரண்டு பேரையும் சதாம் உசேன் உள்ளிட்ட கும்பல் கடத்தி சென்று அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர். படுகாயமடைந்த மணிகண்டன் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் கரும்புக்கடையை சேர்ந்த சதாம் உசேன், இம்ரான், முன்னா, சுல்தான், சானவாஸ் உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த குனியமுத்தூர் போலீசார் , தனிப்படை அமைத்து தலைமறைவாக உள்ள நபர்களை தேடி வந்தனர்.

இதில் சானாவாஸ் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், கூடலூரில் தலைமறைவாக இருந்த சென்னையை சேர்ந்த முன்னா (32) என்பவரை குனியமுத்தூர் தனிப்படை போலீஸார் கூடலூர் உள்ளூர் போலீஸார் உதவியோடு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட முன்னா 2011 ஆம் ஆண்டு கிருஸ்ணகிரியில் ஒரு கொலை வழக்கும், 2013 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் வெடி மருத்து வழக்கும் சி.பி.சி.ஐ.டியில் உள்ளது. 2015 ம் ஆண்டு புழல் சிறை கலவரத்திலும் தொடர்புடையவர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

மேலும் படிக்க