• Download mobile app
12 May 2024, SundayEdition - 3014
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இளம் கலைஞர்களுக்கு நாட்டிய கலை நடனம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 4, 2019 தண்டோரா குழு

கோவையில் இளம் கலைஞர்களுக்கு நாட்டிய கலை நடனம் குறித்த திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அழகிய கலை வடிவமான நூதயர்பானம்,பரத நாட்டியம் ஒரு திறமையான வரலாற்றை கொண்டு உடலின் பங்கேற்பு மட்டுமல்லாமல் மனதிற்கும் அப்பாலும் அடங்க கூடியதாக இருக்கின்றது. இந்த நாட்டிய நிகழ்ச்சியானது மற்ற நகரங்களில் இருப்பது போல் கோவை நகரத்திலும் 70க்கும் மேற்பட்ட நடன பள்ளிகள் இருக்கின்றது. இவர்களுக்கு தத்துருவமான நடனங்களை காண்பிக்கும் வகையிலும் பள்ளி குழைந்தைகளான இளம் கலைஞர்களுக்கு
நாட்டிய கலை நடனம் குறித்த திறமைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் கோவை நாட்டிய நிக்கேதன் நிருத்தியர்பானம் சார்பில் பெங்களூர் மற்றும் புது டெல்லியில் இருந்து அழைத்து வரப்பட்ட பரத நாட்டியத்தில் புகழ் பெற்ற பரஸ்வநாத் ,ராமா வைத்தியநாதன், மற்றும் தக்ஷிணா வைத்தியநாதன் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வில் கண்ணை கவரும் வண்ணத்தில் ஒவ்வொரு அசைவானது காணப்பட்டது.இதில் சுமார் 800க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

மேலும் படிக்க