• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இளம்பெண் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழப்பு

June 19, 2019 தண்டோரா குழு

பீகார் மாநிலத்தில் மூளை காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கோவையில் இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலம் முசாபர் நகரில் மூளை காய்ச்சல் நோய் குழந்தைகளிடையே பரவி வருகிறது. கடந்த ஜனவரியில் பரவ தொடங்கிய இந்த நோய், கோடை காலத்தில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலினால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். அதேபோல, நாடு முழுவதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக மூளை காய்ச்சலினால் பலியாகி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மூளைக்காய்ச்சலினால் பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கோவை சரவணம்பட்டி அருகே உள்ள விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் குமார் என்பவரின் மகள் ரம்யா (21). இவர் கடந்த சில நாட்களாக தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு வந்தார். இதையடுத்து, சிகிச்சைக்காக கடந்த 15-ம் தேதி ரம்யாவை கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு இருந்த இவருக்கு பரிசோதனை செய்ததில், மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பல்வேறு சிகிச்சைகள் கொடுக்கப்பட்டும் இளம் பெண் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க