• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இறந்த சிட்டுக்குருவி குஞ்சுக்கு உணவளித்த தாய்க்குருவி

November 15, 2017 தண்டோரா குழு

தொழில்நுட்ப வளர்ச்சியில் முன்பு இருப்பதை போன்று தற்போது சிட்டுக் குருவிகளை நாம் காண்பது அரிதான விஷயமாகிவிட்டது. இன்றைய சூழலில் சிட்டுக் குருவிகளை பாதுகாக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகிலுள்ள இடிகரை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தன் வீட்டுத் தோட்டத்தில் சிட்டுக்குருவிகளுக்கான வாழ்விடத்தை ஏற்படுத்தியிருந்தார். இதனால் இங்கு, வைக்கப்பட்டுள்ள பானைகளில் ஏராளமான சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன.

தண்ணீர் நிரப்பப்பட்ட தொட்டிக்கு மேல்,சிட்டுக்குருவி ஒன்று கூடு கட்டி மூன்று குஞ்சுகளை பொரிதிருந்தது. தாய் சிட்டுக்குருவி, தினமும் வெளியே சென்று குஞ்சுகளுக்கு இரை தேடி எடுத்து வந்து குஞ்சுகளுக்கு பாசத்துடன் ஊட்டி வளர்த்து வந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் குஞ்சுகளுக்கு இரை தேடி தாய்க்குருவி வெளியே சென்றது.அப்போது, கூட்டில் இருந்த குஞ்சு ஒன்று தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து இறந்து போனது. இதனைப்பார்த்த செல்வராஜ் இறந்து போன குஞ்சைவெளியே எடுத்து சுவர் மீது வைத்துவிட்டு தாய்க்குருவி எப்போது வரும் என அதன் வருகைக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த தாய்க்குருவி குஞ்சு இறந்து போனதை அறியாமல் தாய்மை உணர்வுடன் அதற்கு இரை ஊட்டமுயன்றது. ஆனால், குஞ்சு வாயைத் திறந்து இரையை பெறவில்லை. அப்போது தான் தாய்க்குருவி தன் குஞ்சு இறந்ததை உணர்ந்தது.

இதனால், தாய்க்குருவி சோகத்தில் மூழ்கியது. இந்த பாச சம்பவத்தை செல்வராஜும் கனத்த இதயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், இறந்துபோன சிட்டுக்குருவியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த செல்வராஜ் குடும்பத்தினர் முடிவு செய்தனர். சிட்டுக்குருவி உடலுக்கு மாலை மரியாதை செலுத்தப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. குஞ்சு அடக்கம் செய்யப்பட்டதை தாய்க்குருவி சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

இது குறித்து செல்வராஜ் கூறுகையில்,

“தாய்க்குருவி இறந்து போன குஞ்சுக்கு உணவு ஊட்ட முயன்றதைப் பார்த்து எனக்கு கண்ணீரே வந்துவிட்டது. என்னால் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அன்பு பாசம் அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை அப்போது உணர்தேன். ஒரு சிட்டுக்குருவின் இழப்பு ஒரு குழந்தையின் இறப்புக்குச் சமமானது தான். சிட்டுக்குருவிகளின் முக்கியத்துவத்தை மனித சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க