June 23, 2020
தண்டோரா குழு
கோவையில் இருந்து திரிபுரா மாநிலம் செல்ல மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 48பேர் அனுப்பபட்டனர்.
கோவை மாவட்டத்தில் இருந்து புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்களை, மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு இரயில்களின் மூலமாக சுமார் 50 ஆயிரம் பேருக்கும் மேலாக,ஜார்க்கண்ட், பீகார் ஒரிசா, மத்திய பிரதேசம்,போன்ற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் கோவை மாவட்டதில் உள்ள, போடிபாளையம், பகுதியில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்த திரிபுரா மாநில இளைஞர்கள் 48 பேர் தங்களின் ஊர்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கு விண்ணப்பித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, கோவை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,இது குறித்து திரிபுரா மாநில அரசிடம் பேசி அவர்களுக்கு அனுமதி பெற்றனர். இதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து, இரவு 11 மணிக்கு திரிபுரா மாநிலத்திற்க்கு செல்லும் சிறப்பு இரயில் மூலம் செல்ல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சிறப்பு இரண்டு பேருந்துகள் மூலமாக, சென்னைக்கு அனுப்பப்பட்டனர். முன்னதாக சமூக இடைவெளி விட்டு அவர்களை வரிசைப்படுத்தி அவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் கொண்டு அவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய பட்டது இதனை தொடர்ந்து, அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் உணவு, தண்ணீர் பாட்டில் வழங்கி பேருந்துகளில் ஏற்றி சென்னை க்கு அனுப்பி வைத்தனர்.