• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இருந்து 42 மேகாலயா மக்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

May 13, 2020 தண்டோரா குழு

கோவையில் இருந்து 42 மேகாலயா மக்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரானா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கினால் கோவையில் தங்க வைக்கப்பட்டிருந்த வட மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேகாலயாவை சேர்ந்த மக்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அனுமதி பெற்றதன் அடிப்படையில் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 3 தனியார் பேருந்துகள் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கிருந்தவர்கள் மேகாலயா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் மூலம் அனுப்பப்பட உள்ளனர். அதற்கான முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் காலையில் உணவு அளிக்கப்பட்டு மேற்கொண்டு பழங்களும் அளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த பலவிஷா கூறுகையில்,

தாங்கள் மேகாலயா மாநிலத்திற்கு செல்வதற்காக மேகாலயா மாநில அரசிடமிருந்து ஒரு விண்ணப்பம் தமிழக அரசின் மீது ஒரு விண்ணப்பம் சேர்த்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து பரிசீலனைக்கு பின் மேலே செல்ல அனுமதிக்கப்பட்டோம். கோவை மாவட்ட நிர்வாகமும் தங்களை மேகாலயா செல்வதற்காக இங்கிருந்து சென்னை வரை தனியார் வாகனத்தில் அழைத்து செல்ல உள்ளது.கோவை மாவட்ட நிர்வாகமும் தங்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்கள் போன்றவற்றை அளித்து உதவியுள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது தங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க