• Download mobile app
22 Jul 2026, WednesdayEdition - 3815
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து இலங்கைக்கு வாரத்தில் 4 நாள் விமான சேவை

March 16, 2017 தண்டோரா குழு

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் வாரத்திற்கு நான்கு நாட்கள் சேவையை வழங்கவுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இதுவரை இரண்டு சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை வழங்கி வருகின்றன. அதன்படி, ஐக்கிய அமீரக நாடான துபாய்க்கு ஏர் அரேபியா விமான சேவை நிறுவனமும், சிங்கபூருக்கு “சில்க் ஏர்” விமான நிறுவனமும் சேவை புரிந்து வருகின்றன.

இந்நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் சேவை வழங்கவுள்ளது. கோவையிலிருந்து கொழும்புக்கும், கொழும்பிலிருந்து கோவைக்கும் இந்த விமானம் வாரத்தில் செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் இயக்கப்படும். இந்தச் சேவை வரும் ஜூலை மாதம் 15-ம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை சேர்த்து கோவையிலிருந்து மொத்தம் மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க