• Download mobile app
28 Mar 2026, SaturdayEdition - 3699
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இருட்டு அறைக்கு எடுத்து வரப்பட்ட வாக்கு பதிவு இயந்திரங்கள்

April 7, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டமன்ற தேர்தல் ஆனது நேற்று நடைபெற்ற நிலையில் அதற்கு முந்தைய தினம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான நான்கு சக்கர தள்ளு வண்டிகள் போன்றவை கனரக வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.

நேற்று தேர்தல் முடிந்ததும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் போன்றவை மீண்டும் அந்தந்த மாவட்டத்தில் உள்ள இருட்டு அறைக்கு எடுத்து வரப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் இருந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் போன்றவை தடாகம் சாலை அரசு தொழில்நுட்பக்கல்லூரி வளாகத்திற்கு எடுத்து வரப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கு இருக்கக்கூடிய இருட்டு அறையில் வைக்கப்பட்டு வருகின்றது.

50க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் மூலம் எடுத்து வரப்படும் இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருட்டு அறையில் வைக்கப்பட்டு தகுந்த பாதுகாப்போடு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மூடப்படும். மேலும் ஒவ்வொரு அறைக்கும் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர்.

மேலும் படிக்க