• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இரண்டாவது வாரமாக காவல் துறை நடத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம்

October 18, 2020 தண்டோரா குழு

கோவையில் இரண்டாவது வாரமாக
மாநகர காவல் துறை சார்பாக நடத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் பிரச்சினைகளுக்குத் தீர்வு மாநகர பொதுமக்கள் காவல்துறையை வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

கோவை மாநகர போலீஸ் சார்பில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் தெப்பகுளம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் போலீஸ் கமிஷனர் சுமித் சரண் உத்தரவின் பேரில் துணை கமிஷனர் ஸ்டாலின் மேற்பார்வையில் மேற்குப்பகுதி உதவி கமிஷனர் திருமேனி முன்னிலையில் நடந்தது. இந்த கூட்டத்தில் 50 பேர் பங்கேற்றனர்.50 பேரிடம் புகார் மனு பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. பெரும்பாலான புகார் மனுக்கள் குடும்ப விவகாரம், கணவர், மனைவி வாக்குவாதம் தகராறு தொடர்பாக பெறப்பட்டது.

ஆர்எஸ் புரம், பெரியகடைவீதி, உக்கடம் , வெரைட்டி ஹால் ரோடு, மேற்குப்பகுதி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பொதுமக்களிடம் புகார் பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.இதில் 50 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு தங்களது புகார் மனுக்கள் அளித்து வந்தார்கள். மக்கள் காவல் நிலையம் சென்று புகார் அளித்துவந்த காலம்மாறி தற்பொழுது காவலர்களே. மக்களைதேடி சென்று குறைகளை தீர்க்கும் இந்த முடிவு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்த முகாமில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய பெரிய கடை வீதி, விவேகாணந்தன், ஆா்,எஸ் புரம், கனகசபாபதி, வெரைடிஹால் ரோடு, மரியமுத்து,உக்கடம்காவல் நிலையம் ராஜவேல், உள்ளிட்ட காவல ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையம் மேற்கு ஆய்வாளர் பிரபாதேவி, ஆகியோரும், காவல் நிலைய உதவி ஆய்வாளர்களும் கலந்துகொண்டு மக்களின் குறைகளை கேட்டு அறிந்து வந்தார்கள்.

மேலும் படிக்க