• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று முதல் முழுஊரடங்கு அமல் – வெறிச்சோடிய சாலைகள்

April 26, 2020 தண்டோரா குழு

இன்று முதல் 29 வரை முழு ஊரடங்கு என்பதால் கோவை மாநகர முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.

நாடு முழுவதும் கொரானா தொற்று அதிகரித்து வரும் சூழ்நிலையில் 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் யாரும் அதிகப்படியாக வெளியே வராமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு பின்னரும் கொரோனா தொற்று இதுவரை குறைந்தபாடில்லை தமிழகத்தில் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குறிப்பாக சென்னை கோவை,மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக காணப்படுகிறது. இதன் பொருட்டு தமிழக முதல்வர் வரும் 26 முதல் 29 வரை நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்குகினை அமல்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து வழக்கம்போல் நேற்று ஒரு மணி வரை காய்கறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களுக்கான கடை திறந்திருந்த சூழ்நிலையில் இந்த நான்கு நாட்களுக்கு தேவையான பொருட்கள் அனைத்தையும் வாங்கி செல்ல பொதுமக்கள் அதிகமாக கூடி சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பொருட்களை வாங்கிச் சென்றனர்.இதனை அடுத்து முதல்வர் இந்த கடைகளை 3 மணி வரை திறந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தி இருந்தார் அதன்படி 3 மணி வரை பொதுமக்கள் பொருட்களை வாங்கி சென்றனர் தொடர்ந்து நேற்று 3 மணியுடன் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு முழு ஊரடங்குக்கு ஆதரவளித்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இதனை தொடர்ந்து தற்போது கோவையில் 26 முதல் 29 வரை முழு ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பொதுமக்கள் யாரும் வெளியே நடமாடுவது காணப்படுவதில்லை .நகர் முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் அதிகமாக ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.இதனையும் மீறி பொதுமக்கள் தேவையின்றி வெளியே நடமாடினால் கடுமையான சட்டம் பாயும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க