May 27, 2020
தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஆணையாளர் இன்று முதல் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு அனுமதி அளித்துள்ளார்.
இது தொடர்பாக கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலா் ஷ்ரவன்குமார் ஜடாவத் வெளியிட்ட அறிக்கையில்,
அரசின் உத்தரவின்படி சாலையோர தள்ளுவண்டி கடைகள் கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்காக வகுத்துள்ள விதிமுறைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.
கடைபிடிக்க வேண்டியவை:-
* சாலையோர தள்ளுவண்டி கடை வியாபாரிகள் கட்டாயமாக முககவசம் அணிந்திருக்க வேண்டும்.
* சாலையோர தள்ளுவண்டி கடைகளை காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணிவரை மட்டுமே நடத்த வேண்டும்.
* தங்கள் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் முக கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு முககவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை முககவசம் அணிய அறிவுத்தல் வேண்டும்.
* அன்றாடம் சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு கிருமிநாசினி தெளித்து கடைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
* சாலையோர தள்ளுவண்டி கடைகள் மற்றும் இதர கடைகளில் இரண்டு அல்லது மூன்று பணியாளர்களுக்கு மேல் பணியில் அனுமதிக்கக்கூடாது.
* சாலையோர தள்ளுவண்டி கடைகளில் கூட்டம் கூடுவதை தவிக்க வேண்டும்.
* சாலையோர தள்ளுவண்டி கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை சமூக இடைவெளியை கடைபிடிக்கச் வலியுறுத்த வேண்டும்.
* சாலையோரத்தில் இருக்கும் கடைகள் ஒவ்வொன்றிற்கும் குறைந்தது இரண்டு மீட்டா் இடைவெளி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
* சாலையோர தள்ளுவண்டி கடைகளில் வாடிக்கையாளர்கள் அருகில் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கக்கூடாது. பார்சல்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.
* முடிந்தவரை டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வேண்டும்.
* முககவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் செயல்படும் சாலையோர தள்ளுவண்டி கடைகளில் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் கடைகள் நடத்த அனுமதி இரத்து செய்யப்படும்.
* சாலையோர தள்ளுவண்டி கடைகளில் முதியவர்களை வேலைக்கு அனுமதிக்கக்கூடாது. மேலும், காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் இருப்பின் சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்தக்கூடாது.
மேலும் அவ்வாறு அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள சுகாதார மையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உடனடியாக சென்று காட்ட வேண்டும்.மேற்காணும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயங்கும் பட்சத்தில் மீண்டும் சாலையோர தள்ளுவண்டி கடை நடத்த தடை செய்யப்படுவதுடன் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும்.கொரோனா நோய் தொற்று தாக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி எடுத்து வரும் அனைத்து நடைவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு நல்குமாறு பொது மக்களும் மற்றும் சாலையோர தள்ளுவண்டி கடைகள் உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.