• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாம்களை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்

July 22, 2020 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாம்களை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளின் தொடர்ச்சியாக மேற்கு மண்டலம் வார்டு எண்.24-க்குட்பட்ட சுப்பிரமணியம் ரோடு பாலாஜி கல்யாண மண்டபம், வார்டு எண்.22 மேட்டுப்பாளையம் சாலை சுமித் அடுக்குமாடி குடியிருப்பு, வார்டு எண்.9 டிவிஎஸ் நகர் சாலை, காமராஜர் நகர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம், வார்டு எண்.8 கவுண்டம்பாளையம் இடையர்பாளையம் சாலை சக்தி நகர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளாகம், வார்டு எண்.7 தடாகம் சாலை இடையர்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

பின்னர், தெற்கு மண்டலம் வார்டு எண்.87 வசந்தம் நகர் மற்றும் வார்டு எண்.92 பி.கே.புதூர் இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாநகராட்சி பறக்கும் படை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, மருத்துவ முகாம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், தெற்கு மண்டலம் வார்டு எண்.87 குனியமுத்தூர் சின்ன மயானம் பகுதியில் கழிவுநீர் உந்து சக்தி நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்றுவருவதையும், வார்டு எண்.100 முத்து நகர் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுந நீர் வெளியேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருவதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க