• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று துவகுகிறது 38வது நேஷனல் ஜூனியர் அத்தலடிக் சாம்பியன்ஷிப் போட்டி

November 7, 2023 தண்டோரா குழு

தமிழகத்தின் தொழில் நகரமான கோயம்புத்தூர்,38வது நேஷனல் ஜூனியர் அத்தலடிக் போட்டிகளை நவம்பர் 7 முதல் நவம்பர் 10, 2023 வரை நேரு ஸ்டேடியத்தில் நடத்தத் தயாராகி வருகிறது.

இதுதொடர்பாக கோவையில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் செயலர். சி.லதா, கோவை மாவட்ட அத்தலட்டிக் அசோசியேஷன் தலைவர் லீமா ரோஸ், தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் உப தலைவர் எஸ்.மோகன்தாஸ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சி.லதா,

சமீபத்தில் நேஷனல் ஜூனியர் அத்தலடிக் போட்டிகளை நடத்துவதற்காக புதிய சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் 29 மாநிலங்களில் இருந்து சுமார் 2,200 தடகள வீரர்கள் பங்கு பெறுவார்கள். இதில் தமிழகத்திலிருந்து 175 விளையாட்டு வீரர்கள் (92 ஆண்கள் மற்றும் 83 பெண்கள்) போட்டியிடுகின்றனர் என்றார்.

சாம்பியன்ஷிப் போட்டியில் 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் எட்டு பிரிவுகள் உள்ளன.தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் நேரு ஸ்டேடியம் தற்பொழுது ஒரு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
கோயம்புத்தூரில் நடைபெறும் இந்த போட்டியில், இந்தியா சார்பில் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பல விளையாட்டு வீரர்கள் பங்கு கொள்கிறார்கள்.

38வது நேஷனல் ஜூனியர் அத்தலடிக் போட்டிகளின் துவக்க விழா இன்று மாலை நடைபெறுகிறது. தமிழக அமைச்சர் எஸ். முத்துசாமி, (வீட்டு வசதி மற்றும் ஊரக வளர்ச்சி துறை) விளையாட்டு வீரர்களின் அணிவகுப்பை துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் தலைவர், W.I.தேவாரம், ஐ.பி.எஸ். வரவேற்புரை ஆற்றுகிறார்.அதிலே ஜே. சுமாரிவாலா, (அத்தலட்டிக் இந்தியா ஃபெடரேஷன் – தலைவர்) தலைமையுரை ஆற்றுகிறார். கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாட்டி, ஐ.ஏ.எஸ். போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன், ஐ.பி.எஸ்.. மார்ட்டின் குழுமத்தின் லீமா ரோஸ் மார்ட்டின், தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் உப தலைவர் மோகன்தாஸ் மற்றும் தமிழ்நாடு அத்தலட்டிக் அசோசியேஷன் செயலர் சி.லதா ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மேலும் படிக்க