• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் இன்று கல்லறை திருநாள் கடைபிடிப்பு

November 2, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இன்று கல்லறை திருநாள் அனைத்து ஆன்மாக்கள் தினமான இன்று கல்லறை திருநாள் கடைபிடிக்கப்படுகிறது.

இயேசு அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து 40 நாட்கள் மக்களுக்கு காட்சியளித்து பின் வானுலகை அடைந்தார் அவரை போலவே ஒவ்வொரு கிறிஸ்தவரும் உயிர் தருவதாக கருதப்படுகிறது. மண்ணிலிருந்து ஆதாமை படைத்த ஆண்டவர் அவனது விலா எலும்பிலிருந்து ஏவாள் படைத்தார். பின் அவர்களை பார்த்து மண்ணிலிருந்து படைக்கப்பட்ட நீங்கள் மீண்டும் மண்ணுக்கே திரும்புவீர்கள் என்று மேலும் நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னை விசுவாசிக்கிறவன் எவனோ என்றென்றும் மரிக்காமல் இருப்பான் என்றார். இதன் அடிப்படையில்தான் கிறிஸ்தவர்கள் உடலை நல்லடக்கம் செய்யும் வழக்கத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நாளில் கல்லறைகளை பூக்களால் அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏந்தி வழிபடுவர் இதற்கு முன்னதாக நேற்று சகல பரிசுத்தவான்கள் தினம் என்ற பெயரில் துறவிகளுக்கு அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து கிறிஸ்தவ தேவாலயங்களில் அருகில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கல்லறைகளில் தங்கள் இறந்த உறவினர்களுக்கு அவரவர்களுடைய கல்லறைகளில் வர்ணங்கள் பூசி மாலையில் அலங்காரம் செய்து மெழுகுவர்த்தி ஏந்தி தங்களுடைய பிரார்த்தனையை செய்வார்கள்.

மேலும் படிக்க