July 6, 2020
தண்டோரா குழு
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவையில் நேற்று வரை தொற்று எண்ணிக்கை 741 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிக அதிகபட்சமாக செல்வபுரம் அய்யப்பா நகர் பகுதியில் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர்பட்டறை தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களாவர்.
மேலும், பிஆர்எஸ் குடியிருப்பில் வசிக்கும் 29 வயது ஆயுதப்படை ஆண் காவலர், ரத்தினபுரி பகுதியில் 3 பேர் வடவள்ளி, சிங்காநல்லூர், பொள்ளாச்சி, கணபதி மாநகர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், பீளமேடு, சின்னியம்பாளையம், வீரபாண்டி, கணபதி, ஒத்தக்கால்மண்டபம், சரவணம்பட்டி, டவுன்ஹால், மேட்டுப்பாளையம் சாலை, கே.கே.புதூர், உக்கடம், கே.ஜி.வீதி, நாடர் வீதி, வெள்ளலூர், பெரியநாய்க்கன்பாளையம், கே.ஜி.மருத்துவமனை, ஒண்டிபுதூர், கருமத்தம்பட்டி, பி.என்.பாளையம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கு
கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதனையடுத்து, கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 802 ஆக உயர்ந்துள்ளது.அதேசமயம் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 2 குழந்தைகள், 12 பெண்கள்,26 ஆண்கள் என 40 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும்,கொரோனா தொற்று பாதித்த 349 பேர் தற்போது கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.