• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இன்று ஒரேநாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – பாதிப்பு எண்ணிக்கை 561 ஆக உயர்வு

July 1, 2020 தண்டோரா குழு

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் செட்டி வீதி பகுதியில் 3 வயது குழந்தை உட்பட 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல பீளமேடு பாலன் நகர் பகுதியை சேர்ந்த 8 பேர், சூலூர் கலங்கல் பகுதியை சேர்ந்த 4 பேர், சாய்பாபா காலணி சின்னம்மாள் வீதியை சேர்ந்த 3 பேர், உக்கடம் சிஎம்சி காலணியை சேர்ந்த 2 பேர் , கரும்புக்கடையை சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.அதைப்போல்,
செல்வபுரம், ராமநாதபுரம், கோவில்மேடு, கணபதி, சலிவன் வீதி பகுதியில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் இருந்து விமானம் மூலம் வந்த 2 பேருக்கும் சவுதியில் இருந்து வந்த 5 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

அதேசமயம்,கொரோனாவால் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட 29 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது.இதில் 222 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 337 பேர் சிகிச்சையில்
உள்ளனர்.

மேலும் படிக்க