• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் தீவிரவாத தாக்குதலுக்கு பலியான ராணுவ வீரர்களுக்கு புஷ்பாஞ்சலி

February 15, 2019 தண்டோரா குழு

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி பலியான ராணுவ வீரர்களுக்கு கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா டவுன் பகுதியில் தற்கொலை படையை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் 350 கிலோ வெடி மருந்து நிரப்பிய காரை ரிசர்வ் போலீஸ் படையினர் சென்ற கான்வாய் பஸ் மீது மோதச்செய்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளான். இதில், ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 44 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து இன்று பொதுமக்கள் பள்ளி கல்லூரிகள் மற்றும் அனைத்து கட்சியினர் என இதய அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் செஞ்சிலுவைச்சங்கம் அருகே இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் இறந்த ராணுவ வீரர்களுக்கு மோட்ச தீப வழிபாடு நடத்தப்பட்டது. அத்துடன் பயங்கரவாத அமைப்புகளை தடை செய்ய வேண்டும் எனவும் தேசத்தின் ஒற்றுமையை காப்பாற்ற வேண்டும் எனவும் இந்த வழிபாடு நிகழ்ச்சியில் முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க