• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் இதுவரை 12 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை !

May 11, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 26 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போகுகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்,விமான நிலையம் மற்றும் பொது இடங்கள் என அப்பகுதிகளில் கொரோனா பரிசோதனைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் கோவை மாவட்டத்தில் இதுவரை 12 லட்சத்து 26 ஆயிரத்து 217 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரை 12,26,217 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்து உள்ளோம். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது,’’ என்றார்.

மேலும் படிக்க