• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆர்.எஸ்.எஸ் பிரமுகரை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் ஆய்வு

May 30, 2020 தண்டோரா குழு

ஆர்.எஸ்.எஸ். பிரமுகரை அரிவாளை வெட்டிய வழங்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் வீட்டில் மாநகர் தெற்கு உதவி கமிஷனர் செட்டிரிக் மனுவேல் தலைமையில் போலீஸார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யபிரகாஷ், ஆர்.எஸ்.எஸ் பிரமுகர். இவர் மதுக்கரை சாலையில் மரச்செக்கு எண்ணை கம்பனி வைத்து நடந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி கம்பனியில் இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சூர்யபிரகாஷ் வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக போத்தனூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் முகமது அனிபா என்பவரை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த உக்கடம் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பவரை நேற்று தனிப்படை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் வீட்டில் மாநகர தெற்கு கமிஷனர் செட்ரிக் மனுவேல் தலைமையில் போத்தனூர் ஆய்வாளர் மகேஷ்வரன் உள்ளிட்ட போலீஸார் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க