• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் கோடிக்கணக்கில் மோசடி பாதிக்கப்பட்டவர்கள் புகார்

December 17, 2019

கோவையில் ஆன்லைன் முறைப்படி வர்த்தகம் நடத்துவதாக கூறி கோடிக்கணக்கில் தங்களை ஏமாற்றிவிட்டதாக பாதிக்கப்பட்ட
பொதுமக்கள் இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

கோவை அத்திப்பாளையம் பிரிவு பகுதியில் டெய்லி மேக்ஸ் என்ற தனியார் டிரேடிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தினர் ஆன்லைன் முறையில் வர்த்தகம் நடத்துவதாகக் கூறி பொதுமக்களிடையே முதலீடுகளை ஈர்த்துள்ளனர். இந்த நிலையில் முதலீடு செய்த பணத்தை கொடுக்காமல், அதற்கான வட்டி தொகையையும் கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,

“பல ஆசை வார்த்தைகளை கூறி எங்களிடம் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை முதலீடுகளை பெற்றனர். ஆனால் அதற்கான எந்த ஒரு லாபத்தையும் எங்களிடம் கொடுக்கவில்லை. இவர்களை நம்பி ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரூ.400கோடி வரை முதலீடு செய்துள்ளோம். இதுகுறித்து கேட்டால் எந்த பதிலும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுத்து எங்கள் பணத்தை மீட்டுக்கொடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க