• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆன்லைன் வர்த்தக மோசடி

June 26, 2018 தண்டோரா குழு

கோவை இராமநாதபுரத்திலுள்ள ஒயிட்காலர் அசோசியேசன் என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி சிவக்குமார் என்பவர் பொதுமக்களிடம் 70கோடி ரூபாய் வரை மோசடி செய்து தப்பியுள்ளார்.

இராமநாதபுரம் பகுதியில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்ச ரூபாய் கொடுத்தால் வாரம் ஏழாயிரம் வீதம் 30 வாரத்திற்கு இரண்டு லட்ச ரூபாய் கொடுப்பதாக கூறி தமிழ்நாடு,ஆந்திரா மாநிலங்களைச் சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒயிட்காலர் அசோசியேசனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் சுந்தராபுரத்தில் இருந்து மட்டும் சுமார் 50 கோடி ருபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவில் பாதிக்கப்பட்டார்கள் புகார் அளித்துள்ளனர்.மேலும் ஒரு லட்ச ரூபாய் கட்டக்கூடிய ஒரு நபரை பிடித்து தரும் தரகருக்கு 25,000 ரூபாய் கமிஷன் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி மோசடியில் அப்பகுதியை சார்ந்தவர்களையே ஈடுபடுத்தியுள்ளனர்.

ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை அவரவரின் சக்திக்கு ஏற்ப திட்டங்கள் இருக்கின்றன.இந்த நிறுவனத்தில் பயனாளர்களை சேர்த்து விட்ட தரகர்கள் அனைவரும் அதிக பணம் சேர்த்துவிட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அதிக பணம் கிடைக்கும் என்பதால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் என்பது லட்ச ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர்.இந்நிறுவனத்தின் நிறுவனர் சிவக்குமார் என்பவர் மக்களிடம் நேரடி தொடர்பு கொள்ளாமல் தரகர் மூலமாகவே வாடிக்கையாளர்களை ஏமாற்றியுள்ளார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் பணம் கட்டிய வாடிக்கையாளர்களுக்கு பணம் வரவில்லை. இதனையடுத்து அலுவலகத்தை மூடிவிட்டு சிவக்குமார் தனது மாமியார் ஊரான கரூர் சென்று விட்டார்.சென்னையை சேர்ந்த சிவக்குமார் தனது மனைவி மற்றும் மாமியாரின் தலைமையிலேயே இந்நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.

மேலும் பணம் கட்டியதற்கு அத்தாட்சியாக செல்போனுக்கு குறுந்தகவல் மட்டுமே அனுப்பியுள்ளனர் ரசீது எதுவும் வழங்கவில்லை.ஒரு சிலருக்கு குறுந்தகவலும் அனுப்பாமல் நூதனமாக மோசடி செய்துள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் துறையில் புகாரளித்துள்ளனர்.

ஆவணங்கள் எதுவும் இல்லாததால் புகாரை காவல் துறை பெறவில்லை.இந்நிலையில் ஆந்திர நபர் தன்னை கடத்தி விட்டதாகவும்,விடுவிக்க இரண்டு கோடி ரூபாய் கேட்பதாக வாடிக்கையாளர்களின் செல்போன் எண்களுக்கு சிவக்குமார் குறுச்செய்தி அனுப்பியுள்ளார்.இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் கடந்த மூன்று மாதமாக சிவக்குமாரை தேடி வந்துள்ளனர்.

சிவக்குமார் கரூரிலுள்ள மாமியார் வீட்டில் பதுங்கி இருந்துள்ளார்.அப்போது கோவையில் நடத்தியது போல ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தை கரூரில் தொடங்க திட்டமிட்டு சிவக்குமார் அலுவலகம் தொடங்கியுள்ளார்.இதை கேள்விப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் சிவக்குமாரை கரூரில் வைத்து பிடித்து, கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.தற்போது பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் ஒன்றரை கோடி ரூபாய் வரை வாடிக்கையாளர்களிடம் பணம் வாங்கி தரகராக செயல்பட்ட குறிச்சியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் பயனாளிக்களுக்கு பணம் கொடுக்காமல் சிவக்குமார் தலைமறைவானதால்,தற்கொலை செய்து கொண்டார்.இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

மேலும் படிக்க