June 15, 2020
தண்டோரா குழு
கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பாக
ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா பிரச்சனையின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் எங்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆனால் இது அனைவருக்கும் சரியானதாக படவில்லை. குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் எட்டாக் கணியாகவே உள்ளது.
இந்த நிலையில் கோவையில் திராவிட தமிழர் கட்சியின் சார்பாக ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நடைபெறும் ஆன்லைன் வகுப்புகளை தடை செய்யக்கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது.கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக போராட்டம் நடத்தப்பட்டது. குறிப்பாக ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் நடைபெறும் கல்விக் கொள்கையை தடுத்து நிறுத்தக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழங்கினர். அதே போல 2020-21 கல்வி ஆண்டில் மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 25% இடம் ஏழை எளிய மாணவர்களுக்கு சேர்க்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அதே போல ஆன் லைன் வகுப்புகள் வாயிலாக இணைய பயன்பாடு சிறார்கள் வாழ்கையில் மிகப்பெரிய இன்னலை ஏற்படுத்துவதாகவும் தெரிவிக்கின்றனர்.எனவே பள்ளி சிறார்களுக்கு நடத்தப்படும் ஆன் லைன் வகுப்பை தடை செய்ய வேண்டும் என ஆர்பாட்டக்கார்கள் கேட்டுக்கொணடனர்.