• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆதரவற்றோர்களுக்கு புத்தாடைகள், மற்றும் பட்டாசுகளை வழங்கிய இ.ஆனந்தன்

October 27, 2021 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட் பகுதியில் நடைபெற்ற சாய் கண்ணன் பட்டாசு கடை திறப்பு விழாவில், ஆதரவற்றோர்களுக்கு புத்தாடைகள், மற்றும் பட்டாசுகளை,ஒன்றிய செயலாளர் இ.ஆனந்தன் வழங்கினார்.

கோவை பூ மார்க்கெட் பகுதியில், தேவாங்கர் கல்யாண மண்டபத்தில் சாய் கண்ணன் பட்டாசு கடை திறப்பு விழா நடைபெற்றது. துவக்க விழாவில் பட்டாசு கடையை அன்னூர் ஒன்றிய செயலாளர் இ.ஆனந்தன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து அவர், ஆதரவற்றோர் சுமார் 50 பேருக்கு பட்டாசுகள் மற்றும் புத்தாடைகள் வழங்கினார். சிவகாசி விலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய ரக பட்டாசுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இதில் பீக்காக், போட்டோ பிலிம், ஹெலிகாப்டர் ஆகிய புதிய ரக பட்டாசுகள் வந்துள்ளன. பட்டாசு கடையில் ரூ.5 ஆயித்துக்கு வாங்குபவர்களுக்கு வெள்ளிக்காசும், ரூ.10 ஆயிரத்திற்கு பட்டாசுகள் வாங்கு பவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்படவுள்ளது. போலி விளம்பரங்களை நம்பாமல், நேரடியாக விற்பனையகத்துக்கு வந்து பட்டாசு ரகங்களை பார்த்து, தரமான பட்டாசுகளை குறைவான விலையில் வாங்கி தீபாவளி மகிழ்ச்சியாகக் கொண்டாடுமாறு கடை உரிமையாளரை செந்தில்குமார் கேட்டுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் கோவை தி.மு.க வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் இ. மதனகோபால், சரவணபவ அறக்கட்டளை தலைவர் கே. மணிகண்டன், சாய்பாபா அறக்கட்டளைத் தலைவர் சாய் கார்த்திக், சாய் கண்ணன் பட்டசு கடை உரிமையாளர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க