• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆக்சிஜன் கிடைக்க கண்காணிப்புக்குழு ஆட்சியர் நாகராஜன் உத்தரவு

May 6, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை ஆட்சியர் ஏற்படுத்தி உள்ளார்.

சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிக்கப்படடோர் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படுவதால் கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திரவ ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டாலும் பற்றாக் குறை கூறவில்லை.இதன் காரணமாக ஆக்சிசன் தேவையால் வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வருதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க சிறப்பு கண்காணிப்புக் குழு ஏற்படுத்தி மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேற்று
உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரத்துறை இணை இயக்குனர், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், மாநகர போலீஸ் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனர், மண்டல போக்குவரத்து அலுவலர், சென்ட்ரல், கோவை வடக்கு டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மருந்து கட்டுப்பாட்டு துறை உதவி இயக்குனர் ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருப்பவர்கள். கோவை மருத்துவமனைகளில் உள்ள மொத்த ஆக்சிசன் படுக்கை கட்டில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் தினமும் தேவைப்படும் ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை கணக்கீடு செய்வார்.

இதுதவிர மருத்துவமனைகளுக்கு ஆக்சிசன் தடையின்றி கிடைப்பது.தேவையான ஆக்ஸிஜன் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு மருத்துவமனைகளுக்கு தடையின்றி ஆக்சன் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பார். மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜன் தங்கு தடையின்றி கிடைப்பதால் எந்தவித பிரச்சனையும் ஏற்படாது என அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் படிக்க