• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ஆக்சிஐன் இருப்பை அதிகப்படுத்திட போர்க்கால நடவடிக்கை தேவை – பி.ஆர்.நடராஜன் எம்பி

May 4, 2021 தண்டோரா குழு

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஐன் பற்றாக்குறை இல்லை என்றாலும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஐன் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் ஆக்சிஐன் இருப்பை அதிகப்படுத்திட போர்க்கால நடவடிக்கையை மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள வேண்டும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் வலியுறுத்தினார்.

கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஆயிரத்தி ஐநூறு எண்கிற எண்ணிக்கையை கடக்கிறது. இதனால் அரசு மருத்துவ மனை, ஈஎஸ்ஐ மருத்துவமனை, கொடிசியா உள்ளிட்ட இடங்கள் நிரம்பி வருகின்றன.நோய் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுகின்றனர்.

இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஐன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.இதனையடுத்து கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை செவ்வாயன்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் நேரில் சந்தித்து இதுகுறித்து கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,

ஆக்சிஜன் பற்றாக்குறை பல இடங்களில் இருப்பதாக தகவல் வருகின்றது. அரசு மருத்துவமனையில் போதிய கையிருப்பு இருப்பதாகவும், ஈஎஸ்ஐ மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஐன் பற்றாக்குறை இருப்பதாக தகவல்கள் வருகிறது. மேலும், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மருத்துவர் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் படுக்கைகள், ஆக்சிஐன் வசதி கொண்ட படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

தேர்தல் நடைமுறை முடிவுக்கு வந்துள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன். இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன். கோவையில் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்திட உடனடியாக தலையிட வேண்டும் என அவரிடம் வலியுறுத்தி உள்ளேன். இதேபோன்று தடாகம் செங்கல்சூளை விவகாரத்தில் நீதி மன்றம் கடந்த 30 ம் தேதி சில வழிகாட்டுதல்களை கொடுத்து இருக்கின்றது. நீதிமன்ற உத்திரவு நகல்களை ஆட்சியரிடம் கொடுத்து இருக்கின்றோம். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதர பிரச்சனை என்பதால் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை நடைமுறைபடுத்திட மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினோம் என்றார்.

முன்னதாக இந்த சந்திப்பின்போது, திமுக கோவை வடக்கு மாவட்ட பொருப்பாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், சிபிஎம் கோவை மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, சிஐடியு மாவட்ட நிர்வாகி என்.செல்வராஜ் மற்றும் பிஎன்பி ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க