• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது

June 4, 2019 தண்டோரா குழு

கோவையில் அவதூறு பரப்பியதாக ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜி இவர் அதிமுக 86 வது டிவிசன் செயலாளராக உள்ளார். இவர் மீது அதேபகுதியில் உள்ள தேசிய லீக் கட்சியை சேர்ந்த பிலால் என்பவர் சமூக வலைதளங்களில் அவதூராகவும், அருவெருப்பாகவும் கோவை பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றசம்பவத்தில் முஜியை தொடர்பு படுத்தி வதந்திகளை பதிசெய்து வந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து அதிமுக புறநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்பபிரிவு துணை செயலாளர் ரியோஸ்கான் என்பவர் கோவை குணியமுத்தூர் காவல் நிலையத்தில் பிலால் என்பவர் மீது அவதூறு புகார் செய்துள்ளார். இதனையடுத்து, குணியமுத்தூர் காவல் துறையினர் பிலாலை கைது செய்துள்ளனர்.மேலும் விசாரணையில் சமீபத்தில் கரும்புக்கடை யில் மாநகராட்சி அதிகாரிகளும், நெடுஞ்சாலை துறையினரும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டார்கள். இதில் பிலால் என்பவர் ஆக்கிரமிப்பு செய்த கட்டிடங்களும் இடிக்கப்பட்டதாக தெரிகிறது. அதற்க்கு பழிவாங்கும் விதமாக அவதூறு பரப்பியதாக ஒப்புக்கொண்டதால் குணியமுத்தூர் காவல்துறையினர். இரண்டு பிரிவுகளின் பேரில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்கள்.

மேலும் படிக்க