• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அழுகிய மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கிலோ பழங்கள் பறிமுதல்

April 24, 2019 தண்டோரா குழு

கோவையில் பல கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அழுகிய மற்றும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட சுமார் 350க்கும் மேற்பட்ட கிலோ பழங்களை பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகரில் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகா தலைமையிலான குழுவினர் கோவை கருப்ப கவுண்டர் வீதி,பெரியகடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர் .அப்போது பல்வேறு கடைகளில் அழுகிய மாம்பழம் மற்றும் ஆரஞ்சு,சாத்துக்குடி போன்ற பழங்களும் கார்பைடு கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுமார் 220 கிலோ எடையிலான மாம்பழங்கள்,34 கிலோ மாதுளை,65 கிலோ ஆரஞ்சு மற்றும் 32 கிலோ சாத்துக்குடி ஆகிய பழங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை வேதி பொருட்கள் மூலம் அழித்தனர்.மேலும் கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

மேலும் படிக்க