September 7, 2017
தண்டோரா குழு
நீட் தேர்வை கண்டித்தும், அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோவை அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வளாகம் முன்பு போராட்டம் மேற்கொண்டனர்.
மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை விடுப்பட்டது எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் கல்லூரிக்கு விடுமுறை விடுத்து மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைக்கும் கல்லூரி நிர்வாகத்தை கண்டிகிறோம் என போராட்டத்தின் போது மாணவர்கள் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் 16 மாணவர்கள் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.