• Download mobile app
07 Jun 2026, SundayEdition - 3770
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் அரசு அதிகாரி எனக்கூறி ரூ.30 ஆயிரம் பணம் திருடிச்சென்றவர் கைது

October 17, 2020 தண்டோரா குழு

கோவையில் அரசு அதிகாரி எனக்கூறி அழகு நிலைய உரிமையாரை மிரட்டி ரூ.30 ஆயிரம் பணம் திருடிச் சென்றவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை சொக்கப்புதூரை சேர்ந்தவர்
மதன் கண்ணன்.வாடகை வீட்டில் கடந்த 5 வருடமாக வசித்து வருகிறார்.இவர் தனது நண்பர் ஸ்ரீகாந்த் என்பவருடன் சொந்தமாக டீக்கடைகளுக்கு பயன்படும் டீ பில்டர் கிளாத் சொந்தமாக தயாரித்து சப்ளை செய்து வருகிறார்கள்.தற்சமயம் இந்த தொழில் தொய்வாக இருப்பதால் கோவை பீளமேடு அண்ணாநகர் அருகேயுள்ள ராம்லட்சுமணன் நகரில் நலம் பியூட்டி கேர் என்ற பெயரில் பியூட்டி பார்லர் தொழில் செய்வதற்கு உண்டான வேலைகளை கடந்த 1 மாதமாக செய்து வருகின்றனர்.

மேலும் தொழிலுக்குண்டான உபகரணங்கள் தளவாடங்கள் ஆகியவற்றை வாங்கி வைத்துள்ளனர்.மேலும் கடை அமைப்பதற்கு பதிவு செய்ததற்கான ரசீது பெற்று, கோவை மாநகராட்சியிலும் கோவை தீயணைப்புத்துறையிலும் உரிய விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.இதனிடையே கடந்த கடந்த மாதம் 22 தேதியன்று தங்கள் நிறுவனத்தில் பணிபுரிய தகுதி பெற்ற பெண்களை வேலைக்கு அமர்த்த வேண்டி நேர்காணல் நடத்திக் கொண்டு இருந்த சமயத்தில் மதியம் 1.30 மணியளவில் அழகு நிலையம் சம்பந்தமான துறை அதிகாரி எனக்கூறி வேலுமணி என்பவர் அங்கு வந்துள்ளார். மேலும் விண்ணப்பங்கள் கொடுத்திருந்த பேப்பர்களையும், கைவசம் இருந்த 30,000/- மிரட்டி பறித்துச் சென்றுள்ளார்.

மேலும் செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இதனிடையே நேற்று அழகு நிலையத்தில் இருந்த போது வேலுமணி நேரில் வந்து மீண்டும் 30 ஆயிரம் கேட்டு மிரட்டியுள்ளார். அங்கிருந்தவர்கள் கூடியதால் வேலுமணி தப்பி ஓடியுள்ளார். இதையடுத்து மதன் கண்ணன் பீளமேடு போலீஸில் அளித்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீஸார் வேலுமணியை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் படிக்க