September 7, 2020
தண்டோரா குழு
கோவை கீரணத்தம் அடுத்த காந்திநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் பேனரை சேதப்படுத்தியதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகார் மனுவில்,
குடியிருப்பு பகுதிகளில் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த திமுக உறுப்பினர் கருப்புச்சாமி என்பவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் அப்பகுதியில் வைக்கப்பட்டிருந்த டாக்டர் அம்பேத்கர் பேனர் இன்று காலை அகற்றப்பட்டு, டேபிள் உள்ளிட்டவைகளை உடைத்து சேதப்படுத்தியதாகவும், இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு காவல்நிலையயத்தில் புகார் அளித்தும் எந்த விதமான நடவடிக்கை மேற்கொள்ளததால் மாவட்ட ஆட்சியரிடம் இந்த புகாரை அளிப்பதாக குறிப்பிட்டிருந்தது.