October 7, 2020
தண்டோரா குழு
முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும் கோவையில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் அறிவித்தார்.முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதும்,தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.இதே போல் கோவை அதிமுக அலுவலகம் முன்பு தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் பரிமாறியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.