October 17, 2020
தண்டோரா குழு
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் 49 வது ஆண்டுவிழா நாடுமுழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கோவையில் மாநகர் மாவட்ட செயலாளரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே அர்ஜுனன் தலைமையில் கட்சியின் தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் கட்சி தொண்டர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். அதன் ஒருபகுதியாக கட்சி தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக சென்று கோவை அவினாசி சாலையில் உள்ள அறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது.
அதனைதொடர்ந்து. கட்சி அலுவலகத்தில் கட்சியின் கொடியையேற்றி, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தலைவர்கள் பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது திருவுருவ படத்திற்கு மாலையிட்டு மரியாதை செய்யப்பட்டது. பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்கள். இந்த விழாவில் கட்சியின் கோவை மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.