July 19, 2020
தண்டோரா குழு
கோவையில் அடுத்தது கோவில்களை
சேதப்படுத்தியரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.
கோவையில் நேற்று மர்ம நபர்
என்.எச். சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில்,ரயில் நிலையம் முன்பாக உள்ள விநாயகர் கோவில், கோட்டை மேடு பகுதியில் உள்ள விநாயகர் கோவில், கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் ஆகிய நான்கு கோவில் முன்பாக உள்ள பழைய டயர்களை தீ வைத்தும், கோவில் முன்பாக உள்ள பொருட்களை சேதப்படுத்தியும் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, சிசிடிவி காட்சிகள் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.அப்போது கோவையில் அடுத்தடுத்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் ஈடுபட்டது சேலத்தை சேர்ந்த கஜேந்திரன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கஜேந்திரனின் புகைபடத்தை கொண்டு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.