• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆண்டாளை வழிபட சென்ற அ.தி.மு.க.நிர்வாகி

September 23, 2020 தண்டோரா குழு

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி அ.தி.மு.க.நிர்வாகி கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஆண்டாளை வழிபட சென்றார்.

கோவையை சேர்ந்தவர் விஷ்ணு பிரபு. அ.இ.அ.தி.மு.கட்சியின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் கழக துணை செயலாளரான இவர் வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.மீண்டும் வெற்றி பெற வேண்டி கோவையிலிருந்து ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடத்த வேண்டி தனது குடும்பத்தினருடன் ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்.கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் ஹெலிகாப்டர் வாடகை மையத்தில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று சிறப்பு வழிபாடுகள் செய்து விட்டு மீண்டும் ஹெலிகாப்டரிலேயே கோவை திரும்ப உள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

மூன்றாவது முறையாக அ.தி.மு.க.வெற்றி பெற்று ஆட்சி அமைத்திட வேண்டி இது போன்று சிறப்பு வழிபாட்டை செய்துள்ளதாக தெரிவித்தார்.கோவையில் இருந்து இது போன்று ஹெலிகாப்டரில் பறந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றிய முதல் நபர் இவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க