• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையிலிருந்து டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்டது சின்னதம்பி யானை

January 26, 2019 தண்டோரா குழு

கோவை பெரியதடாகத்தில் பிடிக்கப்பட்ட சின்னத்தம்பி யானை டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் விடப்பட்டது.

தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக சின்னத்தம்பி, விநாயகன் ஆகிய இரண்டு காட்டு யானைகள் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்குப் பின்னர், கடந்த டிசம்பர் மாதம் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு விநாயகன் யானை, கும்கி யானைகளான விஜய், சேரன், ஜான் மற்றும் பொம்மன் ஆகியவற்றின் உதவியதால் பிடிக்கப்பட்டது. பின்னர், வனத்துறைக்குச் சொந்தமான லாரியில் ஏற்றி, முதுமலை வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஒருமாத இடைவெளிக்கு பின் மற்றொரு காட்டு யானையான சின்னதம்பியை பிடிப்பதற்காக டாப்சிலிப் பகுதியில் இருந்து கலீம் என்ற கும்கி யானையும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் இருந்து முதுமலை என்ற யானையும் கோவைக்கு அழைத்து வரப்பட்டன. இதையடுத்து, நேற்று காலை பெரிய தடாகம் வனப் பகுதியை ஒட்டி சின்னத்தம்பி யானைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்த முயன்றனர். ஆனால், அது யானை மீது பாடாமல் விலகி சென்றது. பின்னர் மீண்டும் யானை மீது மயக்க ஊசி செலுத்தினர். அப்போது அந்த யானை விநாயகன் யானையை பிடித்த இடத்திற்கே வந்தது. இதற்கிடையில், சின்னத்தம்பி யானையுடன் ஒரு யானை மட்டும் குட்டியானை இருந்ததால் யானையை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, தற்போது பெண் யானை மற்றும் குட்டியை வனத்துறையினர் காட்டிற்குள் விரட்டினர்.

இதையடுத்து,மூன்று முறை மயக்க ஊசியில் மருந்து செலுத்தப்பட்ட சின்னத்தம்பி, ஓரிடத்தில் நிற்க முடியாமல் நடந்து கொண்டே இருந்தது. விநாயகன் யானையை லாரியில் ஏற்றியதைப் போன்றே, சின்னத்தம்பியின் கால்களிலும் கயிறு கட்டி மரத்தில் கட்டப்பட்டது. பின்னர், சின்னத்தம்பியின் மீது வனத்துறை ஊழியர் ஒருவர் ஏறி, ரேடியோ காலரைப் பொருத்தினார். இதைத் தொடர்ந்து, கலீம், விஜய் ஆகிய கும்கி யானைகளின் உதவியால் அடுத்தகட்டமாக, லாரியில் ஏற்றப்பட்டது. அப்போது, சின்னத்தம்பியின் இருதந்தங்களும் சேதமடைந்தன. இது அங்கு கூடியிருந்த பொதுமக்கள், வனஆர்வலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு வரப்பட்டது.

அங்கு காயமடைந்த சின்னதம்பி யானைக்கு மருத்துவ பரிசோ‌தனை நடத்தப்பட்டு காயம் ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.
பின்னர் நள்ளிரவு இரண்டு மணியளவில் டாப்சிலிப் வனப்பகுதியில் சின்னதம்பி யானையை வனத்துறையினர் விட்டனர். அப்போது சின்னத்தம்பி யானை சோர்வுடன் வனப்பகுதிக்குள் சென்றது. சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க