• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையின் பெருமை மிகு கோனியம்மன் கோவில் தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

March 6, 2019 தண்டோரா குழு

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

கோவை கோனியம்மன் திருக்கோயிலின் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் 14 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவுக்கு பூச்சாட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து மாசி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமையான அன்று அக்கினி சாட்டு மற்றும் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. இதைத் தொடர்ந்து, தினசரி மாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஓதுவார் களின்தேவாரத் திருமுறை பண்ணிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று பிற்பகல் 2.40 மணிக்கு துவங்கி மாலை 5’மணி வரை நடைபெற்றது. இதில்,இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். தேரோட்டத்தில், ராஜ வீதியில் இருக்கும் தேர், நிலைத் திடலில் இருந்து புறப்பட்டு ராஜ வீதி, ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர் வீதி வழியாகச் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்த்து. இதைத் தொடர்ந்துகொடியிறக்கமும், வசந்த விழாவும் நடைபெறுகின்றன. தேர் திருவிழா ஒட்டி தேர்சாலை முழுவதும் காவல்துறை அதிக அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

மேலும் படிக்க