• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைபுதூர் அருகே மீண்டும் மர்ம நபர்கள் சந்தன மரம் வெட்டி கடத்தல் – மக்கள் பீதி

December 9, 2019

கோவைபுதூர் அருகே மீண்டும் மர்ம நபர்கள் சந்தன மரம் வெட்டி கடத்திய சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கோவை சிங்காநல்லூர் அருகே பட்டா கத்திகளுடன் 15 பேர் கொண்ட கும்பல் அப்பகுதியில் இருந்து சந்தன மரங்களை வெட்டி கடத்தி சென்றது. முகமுடி அணிந்து துணிகர செயலில் ஈடுபட்ட இந்த சம்பவம் கோவையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று இரவு கோவை குனியமுத்தூர் அருகே உள்ள கோவைப்புதூர் பகுதியில் X பிளாக்கில் சுரேஷ் மைக்கேல். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரிக்கு சொந்தமான வீட்டில் இருந்த சுமார் 20 ஆண்டுகள் பழையான சந்தன மரத்தை மர்ம நபர்கள் வெட்டி கடத்தி சென்றுள்ளனர். அதே பகுதியில் அடுத்ததடுத்து 3 வீடுகளில் சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே சிங்காநல்லூர் வழக்கில் மர்ம கும்பலை பிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், மீண்டும் கோவைப்புதூரில் மர்ம கும்பலின் செயலால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்லவே அச்சமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க