• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு வாக்காளர் வாக்குபதிவுகளை சரிபார்க்கும் 300 இயந்திரங்கள் கூடுதலாக வரவழைப்பு

March 1, 2019 தண்டோரா குழு

மக்களவை தேர்தலையொட்டி கோவையில் 3728 வாக்காளர் வாக்குபதிவுகளை சரிபார்க்கும் இயந்திரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 300 இயந்திரங்கள் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலுக்கு பயன்படுத்தும் 7263 வாக்குபதிவு இயந்திரங்கள், 3950 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 3728 வாக்காளர் வாக்குபதிவினை சரி பார்க்கும் இயந்திரங்கள் பெங்களுரில் இருந்து கோவை மாட்ட சுகாதார துறை, துணை இயக்குநர் அலுவலத்தில் இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் தேவைக்காக 300 வாக்காளர் வாக்குபதிவுகளை சரிபார்க்கும் இயந்திரங்களும் பெங்களூர் பெல் நிறுவனத்திடம் இருந்து இன்று கொண்டு வரப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் ராசாமாணி முன்னிலையில் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்ட இயந்திரங்கள் இருப்பு அறைபில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள இயந்திரங்கள் சரி பார்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இயந்திரங்கள் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகள் முன்னிலையில் சரிபார்க்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் 2018 டிசம்பர் மாதத்திற்குள் 18 வயது பூர்த்தியானவர்கள், இது வரை வாக்காளர் பட்டியலில் சேராதவர்கள் கோவையில் உள்ளதாக தெரியவந்ததை அடுத்து அவர்களை வாக்களர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருபதாகவும் கூறினார்.

மேலும் படிக்க