• Download mobile app
09 Feb 2026, MondayEdition - 3652
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு தேர்தல் பணிக்கு வந்த துணை ராணுவப்படையினர் ஊர் திரும்பினர்

April 8, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படையினர் ரயில் மூலம் சொந்த ஊர் புறப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி பல்வேறு வட மாநிலங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணை ராணுவப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் 891 பதட்டமான வாக்குச்சாவடிகள் உட்பட பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றினர்.

ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில் இவர்கள் நேற்று இரவு ரயில் மூலம் சொந்த ஊர் சென்றனர். துணை ராணுவத்தினர் ஓட்டுப்பதிவு பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி எண்ணிக்கை மையம் கொண்டு செலுத்துதல் பதட்ட பகுதியில் கூட்டம் கட்டுப்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

போலீசார் பற்றாக்குறை இருந்த நிலையில் துணை ராணுவத்தினர் வருகையால் கோவையில் பதட்டம் சூழல் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க