• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவைக்கு ஆந்திராவில் இருந்து வந்த 2650 டன் அரிசி

April 22, 2020 தண்டோரா குழு

ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2650 டன் அரிசி கோவை வந்தடைந்தது.

மத்திய தொகுப்பில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு புழுங்கல் அரிசி, பச்சரிசி, கோதுமை போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன. இவைகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பின்னர் பொது வினியோகத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும். இதைப்போல் கோவை மாவட்டத்துக்கு வழங்குவதற்காக மத்திய தொகுப்பில் இருந்து வரும் அரிசி, கோதுமை மூட்டைகள் கோவை சிங்காநல்லூரில் உள்ள மத்திய சேமிப்புக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டு பின்னர் லாரிகள் மூலம் எடுத்துச்செல்லப்பட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து சரக்கு ரயிலில் 2650 டன் ரேசன் அரிசி கோவை வந்தது. இந்த அரிசி மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு சிங்காநல்லூரில் உள்ள மத்திய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டு இருப்பு வைக்கப்பட்டன. பின்னர் அங்கிருந்து லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்டு பொது வினியோகத்திட்டத்தின் மூலம் வினியோகிக்கப்பட உள்ளன.

மேலும் படிக்க