• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோயம்புத்தூர் டெம்போ ட்ராவலர் குழு மக்கள நல அறக்கட்டளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

July 22, 2020 தண்டோரா குழு

ஓட்டுனர் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் கோயம்புத்தூர் டெம்போ ட்ராவலர் குழு மக்கள நல அறக்கட்டளையின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோயம்புத்தூர் டெம்போ டிராவலர் குழு மக்கள் நல அறக்கட்டளையின் சார்பில் மத்திய மாநில அரசை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கோவை, தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பத்துக்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர்கள் ஈடுபட்டனர். இவர்களது கோரிக்கையாக வாகனங்களுக்கு வழங்கப்பட்ட தவணை வட்டியை ரத்து செய்ய வேண்டும் எனவும், வரலாறு காணாத பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், பேரிடர் கால சாலை வரியை ரத்து செய்ய வேண்டியும், ஓட்டுனர்களுக்கு பேரிடர் கால நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டியும், ஓட்டுநர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைத்திட வேண்டும் எனவும், வாகன காப்பீடு நிறுவனங்களின் மூலம் பேரிடர் இழப்பு வழங்கிட வேண்டும் எனவும், காலாவதியான சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்ற வேண்டும் எனவும், போக்குவரத்து காவல்துறையின் பொய்யான வழக்கை கண்டித்தும், பழைய வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ததை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வாயிலாக பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர் மத்திய மாநில அரசுகள் ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர் . இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், அனைத்து கால் டாக்சி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, அனைத்திந்திய வாகன ஓட்டுனர் பேரவை, தமிழ்நாடு இருசக்கரவாகன பழுது பார்ப்போர் மற்றும் உரிமையாளர் முன்னேற்றம் சங்கங்களின் கூட்டமைப்பு, என பல்வேறு அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கைகளை மத்திய அரசுக்கு கோசங்களாக எழுப்பி தெரியபடுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க