• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சேரன் விரைவு ரயில் பெட்டிகள் அதிநவீன எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றம்

November 8, 2017 தண்டோரா குழு

கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் இடையே சேரன் விரைவு ரயில் பெட்டிகள் அதிநவீன எல்.எச்.பி. பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே ரயில்பயணத்தை பாதுகாப்பானதாகவும், சுகமாகவும் மாற்ற எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அனைத்து ரயில்பெட்டிகளும் பாதுகாப்பான எல்.எச்.பி ரயில்பெட்டிகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு ஹரிசங்கர் வர்மா அவர்களின் தொடர் முயற்சி காரணமாக வரும் 10.11.2017 முதல் கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்படும் சேரன் விரைவு ரயிலின் பெட்டிகள் அதிநவீன மற்றும் பாதுகாப்பான எல்.எச்.பி ரயில் பெட்டிகளாக மாற்றப்படுகின்றன.இந்த நவீன ரயில்பெட்டிகள் பொறுத்தப்பட்ட சேரன் விரைவு ரயில் கோயம்புத்தூரில் இருந்து 10.11.2017 முதலும், சென்னை சென்ட்ரலில் இருந்து 11.11.2017 முதலும் இயக்கப்படும்.

இந்த ரயில்களின் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள வசதிகள்:

• அதிகரிக்கப்பட்ட பயணிகள் எண்ணிக்கை மட்டுமன்றி, இந்த ரயில்களில் பயோடாய்லெட்கள்,
மேம்படுத்தப்பட்ட நவீன ஸ்பிரிங் பொறுத்தப்பட்ட போகிகள்.

• விபத்துக்களின் போது ஒரு ரயில்பெட்டி மற்ற ரயில்பெட்டியின் மீது மோதி பெரும் சேதம்
விளைவிப்பதை தவிர்க்கும் வகையில் சென்டர் பப்பர் கப்ளர் இணைக்கப்பட்டுள்ளது.

• தீப்பிடிக்காத பிட்டிங்குகள் மற்றும் ரயில்களின் உள்ளே சப்தம் கேட்பதை தவிர்க்கும் வகையில்
இன்சுலேஷன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

• மேலும் பயணிகள் வசதிக்காக பெரிய ஜன்னல்கள், கால் வழுக்காத பிவிசி தரைவிரிப்புகள்,
ரயில்பெட்டிகள் இடையே தானியங்கி கதவுகள் போன்ற மேம்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க