• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோமியம் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் ஆன்லைனில் விற்பனை

June 8, 2017 தண்டோரா குழு

ஆன்லைன் மூலம் கோமியம் (மாட்டு சிறுநீர்) மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் விற்கப்படும் என்று ஆர்எஸ்எஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேஷ் மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் தீன்தயாள் தாம் என்னும் மருத்துவ ஆய்வகம் செயல்பட்டு வருகிறது. அங்கு கோமியத்திலிருந்து அழகு சாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இது குறித்து தீன்தயாள் தாம் கூறுகையில்,

“எங்கள் காமதேனு தயாரிப்புகளில் புற்றுநோய், நீரிழிவுக்கான மருந்துகள், சோப்புகள் மற்றும் பேஸ்கிரீம் உள்ளிட்டவை அடங்கும். இந்த தயாரிப்புகளுக்கு கோமியம் தான் மூலப்பொருள் ஆகும். இந்த தயாரிப்புக்கள் விரைவில் ஆன்லைன் மூலம் கிடைக்கும்” என்று கூறினார்.

“கோமியத்தை தவிர மாட்டின் சாணத்தை பயன்படுத்தி பேஸ்கிரீம் மற்றும் சோப்புக்கள் தயாரிக்கப்படுகிறது. எந்த விதமான ரசாயன பொருளும் பயன்படுத்தி தயாரிக்கப்படுவதில்லை” என்று தீன்தயாள் தாம் மருத்துவ ஆய்வகத்தில் பணிபுரியும் ஊழியர் தெரிவித்தார்.

மேலும் படிக்க