• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோமதிக்கு விஜய் சேதுபதி பாராட்டு – ரசிகர் மன்றம் சார்பாக ரூ5 லட்சம் காசோலை

April 30, 2019 தண்டோரா குழு

ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற கோமதிக்கு நடிகர் விஜய் சேதுபதி ரசிகர் மன்றம் சார்பாக 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகளப் போட்டிகள் நடைபெற்றது. இதில் 800 மீட்டா் ஓட்டப்பந்தயத்தில் 30 வயதான தமிழகத்தைச் சோ்ந்த, இந்திய வீராங்கனை கோமதி மாாிமுத்து 2 நிமிடம் 2.70 விநாடிகளில் 800 மீட்டா் தூரத்தை கடந்து முதல் இடத்தை பிடித்தார்.

திருச்சி அருகே உள்ள கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த இவர் பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார். அதன் பின் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு தொண்டு நிறுவனங்களும் அவருக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

இந்நிலையில், அவரை பாராட்டும் விதமாக பாராட்டும் விதமாக விஜய் சேதுபதி ரசிகர் மன்ற மாநில பொறுப்பாளர்கள் 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினர். இதன் பின்னர் நடிகர் விஜய் சேதுபதி கோமதியிடம் தொலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க