• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோத்தபாயாவை வரவேற்று இருப்பது கண்டனத்திற்கு உரியது – கோவையில் வழக்கறிஞர் ஆர்ப்பாட்டம்

November 29, 2019 தண்டோரா குழு

கோத்தபாய இந்தியா வருவதை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபயா ராஜபக்சே நேற்று இந்தியா வந்தார். இன்று டெல்லியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். இந்நிலையில் கோத்தாபய ராஜபக்சவின் இந்திய வருகையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இலங்கையில் உள்ள தமிழ் மக்களை மனிதாபிமானம் இல்லாமல் கொன்ற கோத்தபாய ராஜபக்சேவை இந்திய அரசு அழைப்பு விடுத்து ராஜ மரியாதை செய்து வருகிறது. இது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல் உள்ளது. ஈழத்தமிழர்களை சர்வாதிகார முறையில் தடை செய்யப்பட்ட பாஸ்பரஸ் குண்டுகளை கொண்டு கொன்ற கோத்தபாயாவை வரவேற்று இருப்பது கண்டனத்திற்கு உரியது. இந்த அழைப்பை திரும்ப பெற்று அவரை மீண்டும் அவர் நாட்டிற்கே அனுப்ப வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோஷம் எழுப்பினர்.

மேலும் படிக்க