July 11, 2020
தண்டோரா குழு
ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஐஎஸ்சி சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் மார்ச் 2020க்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோத்தகிரி செயின்ட் ஜூட் பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஜூனியர் காலேஜில் 16வது பேட்ச் ஆக தேர்வு எழுதிய 12ம் வகுப்பு மாணவர்கள் 86 பேரும் 36வது பேட்ச் ஆக தேர்வு எழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்கள் 135 பேரும் 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.
செயின்ட் ஜூட் பப்ளிக் ஸ்கூல் மற்றும் ஜூனியர் காலேஜில் 12ம் வகுப்பு தேர்வை 86 மாணவர்கள் எழுதினர். அவர்களில் 82 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். அவர்களில் 4 பேர் முதல் வகுப்பிலும் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று 37 பேரும் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்று 32 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பள்ளியில் 97.75 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று மாணவர் கே.லட்சுமி நாராயண பிரசாத் முதலிடத்தையும் 97.25 மதிப்பெண்கள் பெற்று மாணவர் விஷ்ருத் தேவன் 2ம் இடத்தையும் 97 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாணவர் டி.ஹரிஷ் கார்த்திக் 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர். வேதியியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், பொருளாதாரப் பாடப்பிரிவில் தலா ஒரு மாணவரும் வணிகவியலில் 4 மாணவர்களும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர்.
இதேபோல ஐசிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற 135 மாணவர்களில் 133 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்று தேறி இருந்தனர். அதில் 2 பேர் முதல் வகுப்பிலும் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்று 58 பேரும் 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை மதிப்பெண்கள் பெற்று 64 பேரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். பள்ளியில் 98.40 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று மாணவ அக்ஷய் கிருஷ்ணன் முதலிடத்தையும் 96.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாணவர் கே.என்.அஸ்வின் 2ம் இடத்தையும் 96.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று மாணவர்கள் ஏ.ஹரிஹரன், எம்.விக்ராந்த் ஆகியோர் 3ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தனர்.
ஆங்கில இலக்கியம் பாடப்பிரிவில் ஒரு மாணவரும் வரலாறு மற்றும் குடிமையியல் பாடப்பிரிவில் 19 பேரும் கணிதவியல் பாடத்தில் 2 பேரும் வணிக பாடப்பிரிவில் 2 பேரும் கம்ப்யூட்டர் பிரிவில் ஒரு மாணவரும் 100 சதவீதம் மதிப்பெண்கள் பெற்ற சாதனை படைத்திருந்தனர்.