September 15, 2017 
தண்டோரா குழு
                                அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இதுக் குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து தம்பிதுரை நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார். புதிய கொள்கை பரப்பு செயலாளராக எம்எல்ஏ தங்கதமிழ்ச் செல்வனை நியமித்துள்ளார். 
அதேபோல் நாகை மாவட்ட அதிமுக செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நீக்கப்படுவதாகவும், நாகை தெற்கு மாவட்ட செயலாளராக சந்திரமோகனும், வடக்கு மாவட்ட செயலாளராக செந்தமிழனும், நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.